Popular Posts

Friday, 10 July 2026

குடிநீர் வசதி இல்லாத கோட்டாட்சியர் அலுவலகம்... பட்டுக்கோட்டை கோட்டத்தின் அவலம்!


தஞ்சாவூர் மாவட்டம் ஆனது நிர்வாக கட்டமைப்புகளுக்காக மூன்று வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம் என மொத்தம் மூன்று வருவாய் வட்டங்கள் அமைந்துள்ளது.

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மூன்று வருவாய் வட்டங்களுக்கும் உட்பட்ட 300 க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அரசின் சேவைகளை பெறவும், நில ஆவணங்கள் திருத்தம் செய்யவும், தாமத பிறப்பு இறப்பு பதிவு மேற்கொள்ளவும் மற்றும் பிற சேவைகளை பெறவும் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் மிக முக்கிய அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதி கூட இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையான ஒன்றாகும்.

கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளும் செயல் இழந்து இருப்பதால் பொதுமக்கள், பெண்கள் மற்றும் முதியோர் அனைவரும் குடிநீர் இன்றி பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

குடிநீர் வசதி குறித்து அதிகாரிகளிடம் விசாரணை செய்த பொழுது கடந்த ஓராண்டாக குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு இயந்திரம் செயல்படாமல் இருப்பது தெரிய வந்தது. 

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக தற்போது பணிபுரிந்து வருபவர் திரு சங்கர் அவர்கள். சிக்கலான பிரச்சினைகளை கூட சாமர்த்தியமாக சரி செய்யக்கூடிய திறமை கொண்ட அதிகாரியான இவர், அவரின் சொந்த அலுவலகத்தில் நிலவும் பொது மக்களின் மிக முக்கிய குடிநீர் வசதி குறித்தான பிரச்சினையை ஏன் கண்டுகொள்ளாமல் இருந்தார் என்பது தெரியவில்லை.

பொதுமக்கள் நலன் கருதி பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் போர்க்கால அடிப்படையில் குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

குடிநீர் வசதி இல்லாத கோட்டாட்சியர் அலுவலகம்... பட்டுக்கோட்டை கோட்டத்தின் அவலம்!

தஞ்சாவூர் மாவட்டம் ஆனது நிர்வாக கட்டமைப்புகளுக்காக மூன்று வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்தின் கீழ் ப...