Popular Posts

Monday, 24 August 2026

தமிழ்நாட்டு பெண்களுக்கான சூப்பர் அறிவிப்புகள்... 110 விதியின் கீழ் அறிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...


தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து இல்லத்தரசிகள் மற்றும் பெண்களுக்கு சிறப்பான அறிவிப்பினை விதி 110 ன் கீழ் அறிவித்தார்.

அதன் படி,

ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்: முதல்வர் விஜய் அறிவிப்பு

ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இலவச சிலிண்டர் திட்டம் பொங்கல் பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு வரும். சிலிண்டருக்கான பணம் பெண்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மகளிர் இலவச பயணம் விரிவு

மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிா் இலவசமாக பயணிக்கும் வெற்றிப் பயணத் திட்டம் அக்டோபா் 2-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றி பயணிக்கலாம்; மகளிருக்கான பேருந்து பயணத்திற்கு வருமான உச்ச வரம்போ, மேற்கொள்ளும் பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

திருநா், திருநங்கைகள் கட்டணமின்றி பயணிக்கலாம்

திருநா், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் மாநிலம் முழுவதும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் கட்டணமின்றி பயணிக்கலாம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். சாதாரண பேருந்துகள் மட்டுமல்லாமல் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தஞ்சையில் கைது நடைமுறையில் அலட்சியம் காட்டிய CBCID | கொட்டு வைத்த உயர்நீதிமன்றம்...

  "காவல் ஆய்வாளரின் கைது சட்டவிரோதம்!" - சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரி...