Popular Posts

Tuesday, 20 October 2026

சதய விழாவில், சாதிய அமைப்புகளுக்கு செக் வைத்த தஞ்சை மாவட்ட SP


ராஜராஜ சோழன் சதய விழா: தஞ்சையில் பேனர்,

போஸ்டர்களுக்கு கட்டுப்பாடு

தஞ்சாவூர்:

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,041-வது சதய விழா தஞ்சாவூரில் வரும் அக்.21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், விழாவையொட்டி நகரில் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் வைப்பதற்கு காவல்துறை கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவின் போது பல்வேறு சாதிய அமைப்புகளும் ராஜராஜ சோழன் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர் என பிளக்ஸ் பேனர்கள் வைத்து சொந்தம் கொண்டாடி வந்தனர். மேலும், குறிப்பிட்ட சில பேனர்கள் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அளவிற்கு கூட வைக்கப்பட்டு இருந்தன.

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பதே ஒரு பிரச்சினையாக காவல் துறையினருக்கு இருந்து வந்தது.

ஆனால், அதெற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் தற்போதைய தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சுந்தரவதனம் இ.கா.ப அவர்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் அனைத்து சாதிய அமைப்புகளுக்கும் செக் வைத்துள்ளார்.

சதய விழாவையொட்டி தஞ்சாவூர் மாநகரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனால் பொதுமக்கள் மற்றும் விழாவிற்கு வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு சாதிய அமைப்புகள் பிளக்ஸ் பேனர்கள் வைக்க முழுவதும் தடை விதித்துள்ளார். மேலும், மீறுபவர்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அச்சடிக்கும் நிறுவனங்கள் மீதும் சட்ட நடவடிக்கை இருக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

சதய விழாவையொட்டி தஞ்சாவூர் மாநகரில் 700-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டு, விழா நடைபெறும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.மேலும், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் காவல்துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சதய விழா நடைபெறும் நாட்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது என தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

முதல் முறையாக சாதிய அமைப்புகளுக்கு செக் வைக்கும் வகையில் இது போன்ற முன்னெடுப்பை மேற்கொண்டது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...

No comments:

Post a Comment

தஞ்சையில் கைது நடைமுறையில் அலட்சியம் காட்டிய CBCID | கொட்டு வைத்த உயர்நீதிமன்றம்...

  "காவல் ஆய்வாளரின் கைது சட்டவிரோதம்!" - சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரி...