தமிழ்நாட்டில் கடந்த 2026 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட்டு அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் கொறடாவாக மிகவும் இளம் வயதான (30) தனது நீண்ட நாள் வாகன ஓட்டுநரின் மகனாகிய விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ரா.சபரிநாதன் அவர்களை நியமித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள்.
தற்போது சென்னையில் வசித்து வந்தாலும் திரு சபரிநாதன் அவர்களின் பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், வேம்பங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.
இன்று 17.09.2026, காலை 9 மணி அளவில் பேராவூரணி அருகே மருங்கப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான ஸ்ரீ மருந்தீஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடு செய்தார். அப்போது அவர்களுக்கு ஆலய நிர்வாகிகள் தரப்பில் பூரண மரியாதை கொடுக்கப்பட்டது.
வழிபாடு முடிந்த பிறகு மருங்கப்பள்ளம் கிராம மக்கள் அரசு கொறடா என்ற முறையில் அரசின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் மருங்கப்பள்ளம் கிராமத்தில் இருக்கும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை கூறினர் அதற்கு பதிலளித்த அரசு கொறடா திரு ரா.சபரிநாதன் அவர்கள் " நீங்கள் எல்லாம் எங்களுக்கா ஓட்டு போட்டீங்க... இதெல்லாம் கேட்குறீங்க..." என கூற இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்பகுதி மக்கள் முகம் சுருங்கி போனார்கள்.
பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திரு சந்திர காண்டீபன் அவர்கள் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த திரு நா.அசோக்குமார் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் வாக்களித்தாலும் வாக்களிக்கவில்லை என்றாலும் இன்றைய நிலையில் இவர்கள் தானே அரசு என்றும் கோரிக்கை வைத்தால் இப்படி முகத்தில் அடித்த படி பேசுகின்றாரே என்றும் அனுபவம் இல்லாததால் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று சிலரும் முனு முனுத்து சென்றனர் அப்பகுதி மக்கள்.

No comments:
Post a Comment